Tuesday, May 17, 2022

பச்சபயிறு சாதம்

 பச்சபயிறு சாதம் 

தேவையான பொருட்கள்

1. அரிசி - 300 கிராம் 

2. பச்சபயிறு - 150 கிராம் 

3. சின்ன வெங்காயம் - 10 12

4. பூண்டு - 7

5. கருவேப்பிலை - 1 கொத்து 

6. கடுகு - 1/2 ஸ்பூன்

7. சீரகம் - 1 ஸ்பூன் 

8. தக்காளி - 2 

9. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 

10. எண்ணெய் - 3 ஸ்பூன்

11. மிளகாய் தூள் - 1 1/2 spoon

12.மல்லி தூள் - 2 Spoon

11. உப்பு - தேவையான அளவு 

செய்முறை :  

பச்சைப்பயிரை பொன் நிறமாக வறுத்து ஆற வைக்கவும்.  வானல்  சூடேறிய பிறகு எண்ணையை ஊற்றவும். பின்னர் கடுகு, சீரகம்,  கருவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கிய பின்னர் மஞ்சள் தூள், மல்லி தூள் , மிளகாய் தூள், உப்பு  சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் தண்ணீர் சேர்த்து அதனுடன் பச்சபயிறு மற்றும் ஊறவைத்த அரிசியை சேர்த்து கலந்துவிடவும். இரண்டு விசில் வந்தவுடன் இறக்கினால் சுவையான பச்சைப்பயிறு சாதம் தயார்.